இந்தியா

விவாகரத்து வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும்: ஹேமாமாலினி

பிடிஐ

விவாகரத்து வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என மக்களவையில் பாஜக எம்.பி. ஹேமாலினி வலியுறுத்தினார்.

மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது இவ்விவகாரத்தை அவர் எழுப்பினர்.

அவர் பேசும்போது, "விவாகரத்து வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும். இதனால், விவாகரத்து கோரும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்க முடியும்.

குடும்ப வாழ்க்கையில் வெறுப்புணர்ச்சி மேலோங்கிவிட்ட நிலையில் விவாகரத்தை விரைந்து அளிப்பதே சிறந்தது. விவாகரத்தை இழுத்தடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நன்மையும் ஏற்படாமல் போய்விடும்" என்றார்.

SCROLL FOR NEXT