காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் உடனான மோதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
காஷ்மீரின் வடக்கே வாட்சர் வனப்பகுதியில் ஹர்கத் உல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் ஊடுரு வியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த சில தினங்களாக பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹந்த்வாரா என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓம்வீர்சிங் என்ற வீரர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்ததாக, போலீஸார் தெரிவித்தனர்.