திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் குணால் கோஷ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமான சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் ஒரே நாளில் 46 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது சிபிஐ.
ஒடிஷா மாநிலத்தில் 43 வழக்குகளையும், மேற்கு வங்கத்தில் 3 வழக்குகளையும் பதிவு செய்த சிபிஐ, செபி, ஆர்.பி.ஐ, மற்றும் நிறுவன விவகார அமைச்சகம் ஆகியவற்றையும் விசாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கை கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் சிபிஐ கையில் ஒப்படைத்தது. இதற்காக சிபிஐ இணை இயக்குனர் ராஜீவ் சிங் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
சிபிஐ சிறப்பு இயக்குனர் அனில் குமார் விசாரணைகள் நிலவரத்தைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.