மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி

 
இந்தியா

இந்தியர்களில் 80% பேர் அசைவ உணவு உண்பவர்கள்: பிரிக்ஸ் உணவுப் பட்டியல் குறித்து ராகுல் விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நடை​பெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் அதி​காரப்​பூர்வ இரவு விருந்​தில் சைவ உணவு​கள் மட்​டுமே பரி​மாறப்​பட்​டதைச் சுட்​டிக்​காட்​டி, “இந்​தி​யர்​களில் 80% பேர் அசைவம் சாப்​பிடு​பவர்​கள்” என்று கூறி மத்​திய அரசை மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.

சர்​வ​தேசத் தலை​வர்​களுக்கு இந்​தி​யா​வின் சமையல் மற்​றும் பண்​பாட்​டுப் பாரம்​பரி​யத்தை எடுத்​துரைக்க இந்த விருந்து அளிக்​கப்​பட்​டது. இதில் நாட்​டின் ‘ஸ்ரீ அன்​னா’ சிறு​தானியப் பெருமை மற்​றும் சுற்​றுச்​சூழல் நிலைத்​தன்​மையை வெளிப்​படுத்​தும் சைவ உணவு​கள் மட்​டுமே இடம்​பெற்​றிருந்​தன. இதன்​படி காண்ட்​வி, பனீர் லபாப்​தார், குக்சி மார்​மிக், சிறு​தானிய புலாவ், காளான் கலா​வுட்டி மற்​றும் ஜிலேபி போன்ற உணவு​கள் பரி​மாறப்​பட்​டன.

அதி​காரப்​பூர்வ உணவுப் பட்​டியலில் அசைவ உணவு​கள் இல்​லாதது குறித்து சமூக வலை​தளங்​களில் விவாதம் எழுந்த நிலை​யில், தனது எக்ஸ் தளத்​தில் பதி​விட்ட ராகுல் காந்​தி, “தர​வு​களின்​படி 80% இந்​தி​யர்​கள் அசைவ உணவு உண்​பவர்​கள்; இந்​திய அசைவ உணவு​கள் மட்​டுமன்றி தனது சகோ​தரி சமைக்​கும் சோலே பட்​டுரே (வடஇந்​தி​யா​வின் பாரம்​பரிய சைவ உணவு வகை) உணவும் மிக​வும் சுவை​யானது” எனக் குறிப்​பிட்டு இருந்​தார்.

ராகுல் காந்தி தனது 80 சதவீதப் புள்​ளி​விவரத்​துக்கு நேரடி ஆதா​ரம் எதை​யும் குறிப்​பி​டாத​போ​தி​லும், தேசிய குடும்ப சுகா​தா​ரக் கணக்​கெடுப்​பின்​படி 15 முதல் 49 வயதுடைய இந்​திய ஆண்​களில் 83.4% பேரும், பெண்​களில் 70.6% பேரும் குறைந்​த​பட்​சம் எப்​போ​தாவது மீன், கோழி அல்​லது இறைச்​சியை உண்​பது தெரிய​வரு​கிறது.

இணை​யத்​தில் சிலர் இந்த முடிவைக் கேள்விக்​குள்​ளாக்​கிய நிலை​யில், மற்​றவர்​கள் சைவ உணவுப் பட்​டியலை இந்​தி​யா​வின் உணவுப் பாரம்​பரி​யத்​தைப் பறை​சாற்​றும்​ நகர்​வாகப்​ ​பா​ராட்​டினர்​.

SCROLL FOR NEXT