இந்தியா

உ.பி.யில் குப்பை லாரி மீது வேன் மோதி 8 விவசாயிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

போபால்: உத்​தர பிரதேசத்​தின் லக்கிம்​பூர் கேரி மாவட்​டத்தை சேர்ந்த விவசாயிகள் மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்​டத்​தில் நடவு பணியை முடித்​து​விட்டு தங்​கள் கிராமத்​துக்கு வேனில் சென்று கொண்​டிருந்​தனர்.

அதி​காலை 1 மணி​யள​வில் பிந்த்​-கு​வாலியர் நெடுஞ்​சாலை​யில் சென்​ற​போது சாலை​யின் நடுவே அமர்ந்​திருந்த மாடு மீது மோதாமல் இருப்​ப​தற்​காக டிரைவர் வேனை திருப்​பி​யுள்​ளார். இதில் கட்​டுப்​பாட்டை இழந்த வேன் சாலை​யின் எதிர்​திசைக்கு சென்​று, குப்பை லாரி​யுடன் நேருக்கு நேர் மோதி​யது. இதில் வேனில் பயணம் செய்த விவ​சா​யிகளில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

மேலும் 35 பேர் படு​கா​யம் அடைந்​தனர். அவர்​களில் 3 பேர் மருத்​து​வ​மனைக்கு செல்​லும் வழி​யில் உயி​ரிழந்​தனர். விபத்து குறித்து ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்ள உத்​தரபிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.2 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும்​ என அறி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT