இந்தியா

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பிடிஐ

பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதித்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நிலத்தில் உள்ள இலக்கை நோக்கிச் செலுத்தப்பட்ட பிரமோஸ், வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்தது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பரிசோதனை தொடர்பாக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் சிஇஓ சுதிர் மிஸ்ரா கூறும்போது, “உலகின் மிகச்சிறந்த சூப்பர்சானிக் ஏவுகணை என்பதை பிரமோஸ் மீண்டும் நிரூபித்துள்ளது” என்றார். இத்திட்டத்தில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்த சோதனையில் பங்கேற்ற விமானப்படை அதிகாரிகள், பிரமோஸ் குழு, டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் எஸ். கிறிஸ்டோபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் மேற்கு பகுதியில் கடந்த மாதிம் நடத்திய களப்பரிசோதனைகளில் மலைப்பாங்கான பகுதிகளில் இதன் துல்லியத்தன்மை மீண்டும் வெளிப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தில் உள்ள இலக்கை தாக்குதல மற்றும் கப்பல் எதிர்ப்பு திறன் கொண்ட பிரமோஸ் ஏவுகணை ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT