இந்தியா

பல கோடி ரூபாய் உணவு தானிய ஊழல்: பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆர்பாட்டம்

பிடிஐ

பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க முயன்று வரும் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று மொஹாலி அருகே மாநிலத்தின் பல கோடி ரூபாய் உணவு தானிய ஊழல் விவகாரத்தைக் கையில் எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதாவது சிரோமணி அகாலிதள-பாஜக தலைமை பஞ்சாப் அரசை எதிர்த்து ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. சண்டிகர் மற்றும் மொஹாலி நகர நுழைவாயில் பகுதிகளில் பலத்த போலீஸ் படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் ஏராளமான ஆம் ஆத்மியினர் தங்கள் எதிர்ப்பார்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

உணவு தானிய ஊழல் தொடர்பாக முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வீட்டை முற்றுக்கை ஆர்ப்பாட்டம் செய்யவும் ஆம் ஆத்மி திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் சேகரிக்கப்பட்ட உணவு தானியத்தின் கணக்கு வழக்குகள் பஞ்சாப் உணவு சேகரிப்பு முகவாண்மை வசம் இருப்பதாக பஞ்சாப் அரசு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளது ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

பஞ்சாப் விரோத சக்திகள் பஞ்சாப் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன என்று ஆளும் கட்சியினர் கூறியுள்ளனர். மேலும் பிரகாஷ் சிங் பாதல், ஆம் ஆத்மி பற்றி கூறும்போது, “விவசாயிகளுக்காக இந்த கட்சி தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது” என்று சாடினார்.

ஆம் ஆத்மி தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறும்போது, “மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் மிகப்பெரிய உணவு தானிய ஊழலை அம்பலப்படுத்தியது. பாதல் அரசு ஒன்று ரூ.12,000 கோடியை விழுங்கியிருக்க வேண்டும், அல்லது உணவுதானியங்களை பஞ்சாப் கிடங்கிலிருந்து கொண்டு சென்றிருக்க வேண்டும்” என்று கடுமையாக சாடினார்.

SCROLL FOR NEXT