இந்தியா

இந்தியாவில் குறையும் கரோனா தொற்று: இன்று 2,827 பேருக்கு பாதிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான கரோனா தொற்று விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,897 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்தது.

இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 4,31,13,413 என்றளவில் உள்ளது. நாடு முழுவதும் 19,067 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,230 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 4,25,70,165 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் தொற்று பாதிப்புக்கு 54 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 5,24,181 பேர் கரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 14,85,292 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 190,83,96,788 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT