இந்தியா

கேரளாவிலும் நிர்பயா சம்பவம்: பலாத்காரம் செய்து மாணவி கொலை

செய்திப்பிரிவு

டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற சம்பவம், கேரளாவிலும் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் ராய மங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது இராவிச்சிரா. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எர்ணாகுளத் தில் உள்ள அரசு சட்டக் கல்லூரி யில் படித்து வந்தார். கடந்த வியாழன் அன்று இரவு மாணவி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பணி முடிந்து அன்று இரவு வீடு திரும்பிய மாணவியின் தாய், அவரை சடலமாக கண்டதும் அலறி துடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இளம் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத அறிக்கையில் அந்த பெண் மிக கொடூரமாக பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்ப தாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை போன்றே, இந்த இளம் பெண் ணையும் குற்றவாளிகள் கொலை செய்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT