கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி தலைமையிலான புதிய அரசு வரும் புதன்கிழமை (மே 25) பதவியேற்க உள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர் தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதி யில், 91 இடங்களை எல்டிஎப் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பினராயி விஜயன் முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிய அரசு பதவியேற்கும் நாள், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ். அச்சு தானந்தனை அவரது இல்லத்தில் பினராயி விஜயன் நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறும்போது, “கேர ளாவில் புதிய அரசு வரும் 25-ம் தேதி பதவியேற்கிறது. திருவனந் தபுரம் மத்திய மைதானத்தில் பதவியேற்பு விழா நடத்த திட் டமிட்டுள்ளோம். அமைச்சரவை தொடர்பான விஷயங்களை விவா திக்க எல்டிஎப் ஞாயிற்றுக்கிழமை (இன்று) கூடுகிறது” என்றார்.
அச்சுதானந்தனுடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட் டதற்கு, “அச்சுதானந்தன் முதல் வராக இருந்தவர். அனுபவம் மிக்க வர். எனவே அவரிடமிருந்து பல விஷயங்களை அறிந்து கொள் வது அவசியம்” என்றார்.