இந்தியா

அதிக பயணிகளை கையாண்டதில் டெல்லிக்கு 2-ம் இடம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், கரோனா பரவலுக்கு முன்பு 23-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் அட்லாண்டா விமான நிலையம் 44.20 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 36.10 லட்சம் பயணிகளைக் கையாண்டு இரண்டாமிடத்திலும், துபாய் விமான நிலையம் 35.50 லட்சம் பயனிகளைக் கையாண்டு மூன்றாமிடத்திலும் உள்ளன.

SCROLL FOR NEXT