டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
வடக்கு டெல்லி, சிவில் லைன்ஸ் பகுதியில் டெல்லி சட்டப்பேரவை உள்ளது. இதன் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வரவேற்பு ஹாலில் நேற்று காலை 9.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலின் பேரில் 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மின் கசிவே தீவிபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதுகிறோம். காலை 10.10 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” என்றார்.
-