கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை முதலில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கி, பின்னர் படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளில் பொழியத் தொடங்கும். இந்த பருவ மழை வரும் மே 18-ம் தேதியே அந்தமானை வந்தடையும் என்பதால், இந்த ஆண்டு கேரளாவில் 3 நாட்களுக்கு முன்னதாகவே அதாவது ஜூன் 1-ம் தேதிக்கு பதிலாக மே 28-ம் தேதியே தொடங்கும்.
மேற்குவங்கத்தில் ஜூன் 10, மகாராஷ்டிராவில் ஜூன் 12, டெல்லியில் ஜூலை 1, ராஜஸ்தானில் ஜூலை 12-ம் தேதிகளில் பருவமழை தொடங்கும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.