இந்தியா

டீசல் கார்களுக்கு தடை எதிரொலி: டெல்லியில் ஓட்டுநர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

டெல்லியில் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக, பதிவு எண் அடிப்படையில் கார்களை இயக்கும் திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் டெல்லி அரசு மேற் கொண்டுள்ளது. இதனிடையே, வர்த்தக ரீதியிலான டீசல் கார்கள், இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் மட்டுமே இயங்க வேண்டும் எனக்கூறி மே 1-ம் தேதி வரை மாநில அரசு கெடு விதித்தது. இதை எதிர்த்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவால் சுமார் 30 ஆயிரம் டீசலில் இயங்கும் வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று சில டீசல் கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி, குர்காவ்ன் போன்ற பகுதி களில் முக்கிய சாலைகளை மறித்து வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று சில மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

“தனியார் உரிமையாளர்கள் டீசல் கார் வைத்துள்ளனர். அவர் களுக்கு தடை விதிக்காமல், வாடகை கார் ஓட்டுநர்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? இந்த தடை மூலம் புதிய காரை வாங்கும் படி எங்களை நிர்பந்திக்கின்றனர். நீண்ட கால பிரச்சினைக்கு திடீர் தீர்வு காண முடியாது” என வாடகைக் கார் ஓட்டுநர்கள் சங்கத் தினர் தெரிவித்துள்ளனர்.

“நான் வீட்டை விற்று கார் வாங்கி, வாடகைக்கு ஓட்டு கிறேன். இந்த தடை உத்தர வால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. என் குடும்பத்துக்கு எப்படி உணவளிக்க முடியும்” என ஓட்டுநர் தருண் குமார் கேள்வியெழுப்புகிறார்.

SCROLL FOR NEXT