கேரள சட்டப்பேரவைக்கு வரும் மே 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முதல்வர் உம்மன் சாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் பினராயி விஜயன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால், பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 1,647 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
இந்நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மே 2-ம் தேதி என்பதால், நாளை மாலை இறுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.