இந்தியா

நீதிபதிகள் எண்ணிக்கை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

நீதிபதிகள் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வனி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் “சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளபடி நீதிபதி கள் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்க உத்தரவிட வேண்டும். நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தத்துக்கான தேசிய திட்ட ஆலோசனை கவுன்சிலின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய சட்டம், நீதித் துறை மற்றும் நிதித் துறை அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT