டெல்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவன் என்று அடுக்குமாடி கட்டிடத்தில் அமலாக் கத் துறை தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு 6-வது மாடி படிக்கட்டு பகுதியில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியானது. தீயணைப்புத் துறை யினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை, நாட்டில் சட்டவிரோத பணப் பரி மாற்றம் தொடர்புடைய வழக்கு களை விசாரித்து வருகிறது.