தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் இயற்கையாக பனிலிங்கம் உருவாகிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 2-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 18-ம் தேதி நிறைவடைகிறது.
இது குறித்து அமர்நாத் புனித யாத்திரை வாரிய சிஇஓவான பி.கே.திரிபாதி கூறும்போது, ‘‘நாடு முழுவதும் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கி மூலம் இதுவரை முன்பதிவு செய்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. பால்டால் மற்றும் பஹால்கம் என இரு வழிகளில் நாளொன்றுக்கு 7,500 பக்தர்கள் வீதம் பனி லிங்கத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்’’ என்றார்.
www.shriamarnathjishrine.com என்ற இணையதளம் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.