நாடாளுமன்றத்தின் 2-வது மாடியில் நேற்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மதியம் 1.30 மணியளவில் 2-வது மாடியில் இருந்த 219-வது அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் உயிர் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மேலும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டமும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து நடந்தது.
இதற்கிடையில் அதிகாரிகள் மேற் கொண்ட முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.