இந்தியா

3டி வேகத்தடையை பயன்படுத்த மத்திய அரசு முடிவு

செய்திப்பிரிவு

அதிவேகமாக தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதை தடுப்பதற்காக 3டி (முப்பரிமாண) வேகத்தடையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இந்த யோசனையை முன்வைத்துள்ளார். 3டி வேகத்தடை குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "3டி (முப்பரிமாண) வேகத்தடையை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் தேவையில்லாம் ஸ்பீடு பிரேக்கர்களை அதிகமாக அமைப்பதை தவிர்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

சாலை போக்குவரத்தை சீர் செய்ய இதுபோல் ஓவியங்களை பயன்படுத்துவது இதுவே முதன் முறை அல்ல. இதற்கு முன்னர் சமூக ஆர்வலர்கள் சிலர் சாலைகளில் பள்ளங்கள், குழிகள் போன்ற முப்பரிமாண ஓவியங்களை வரைந்து கவனத்தை ஈர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT