பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள தீவிரவாத குழுக்களை ஒழிக்க வேண்டும் என இந்தியா சார்பில் திட்டவட்டமாக வலியுறுத்தப் பட்டது.
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக ‘ஹார்ட் ஆப் ஏசியா’ என்ற பெயரில் டெல்லி யில் நேற்று கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் கலந்துகொள் வதற்காக டெல்லி வந்திருந்த, பாகிஸ்தான் வெளியுறவு செயலர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி இந்திய வெளியுறவு செயலர் எஸ்.ஜெய் சங்கரை தனியாக சந்தித்து பேசினார்.
அப்போது இந்தியா தரப்பில் பதான்கோட் தாக்குதல் தொடர் பான பாகிஸ்தானின் விசாரணை யில் விரைவான மற்றும் தெளிவான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. தவிர மும்பை தாக்குதலில் தொடர் புடைய குற்றவாளிகளுக்கு பாகிஸ் தான் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தியா மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து காஷ்மீர் விவகாரம் முக்கிய பிரச்சினையாக எழுப்பப் பட்டது. மேலும் இந்தியாவின் ‘ரா’ அதிகாரி குல்புஷண் ஜாதவ் பிடிபட்டது தொடர்பாகவும், பலுசிஸ் தான், கராச்சி ஆகிய பகுதிகளில் ‘ரா’வின் நடவடிக்கை தென்படுவதா கவும் கவலை தெரிவிக்கப்பட்டது.
இது தவிர சிறை கைதிகள், மீனவர்கள் மற்றும் மத சுற்றுலா தொடர்பான மனிதாபிமான விவகாரங்கள் குறித்தும் இர தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே நீடிக்கும் பிரச்சினை தொடர்பாக கருத்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்தும் கலந்து கொண்டார்.