கர்நாடகாவில் கலப்பு மத திருணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
மண்டியாவை சேர்ந்த டாக்டர் நரேந்திர பாபுவின் மகள் அஷிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த முக்தையார் அகமது என்ப வரின் மகன் ஷகீலுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது. இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடக்க வுள்ள இந்த திருணத்துக்கு பாஜக, பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன..
சமீபத்தில் மணமகள் ஆஷிதாவின் வீட்டை முற்றுகை யிட்ட இந்து அமைப்பினர், ‘திரும ணம் மூலம் இந்து பெண்ணை மத மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். திட்டமிட்ட ‘லவ் ஜிஹாத்’ என்பதால் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும்’ என மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பதறிப் போன இரு வீட்டாரும், மண்டியா மாவட்ட எஸ்.பி சுதீர் குமாரிடம் புகார் அளித்தனர். மேலும் திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பாஜக, பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்து அமைப்பினரும், ஒக்கலிகா சாதி அமைப்பினரும் இணைந்து, கலப்பு மத திருமணத்தை நிறுத்தக் கோரி நேற்று மண்டியாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. எனினும் ஆட்டோ, பேருந்து ஆகிய வை வழக்கம் போல் இயங்கின.
இதனால் ஆவேசம் அடைந்த இந்து அமைப்பினர், சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. மேலும் சாலையின் நடுவே டயர் களை தீயிட்டு கொளுத்தி போக்கு வரத்தையும் தடை செய்தனர். அப் போது ஒக்கலிகா சாதி அமைப்பை சேர்ந்த இருவர் அருகில் இருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீ ஸார் கைது செய்தனர். போராட் டத்துக்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி மஞ்சுநாத் என்பவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் ஷகீல் - அஷிதா திருமணம் இன்று நடைபெற இருப்பதால் மண்டியாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.