இந்தியா

சக்திமான் குதிரை 45 நாட்களில் நடக்கும்: சிகிச்சையளிக்கும் உத்தராகண்ட் மருத்துவர்கள் தகவல்

செய்திப்பிரிவு

உத்தராகண்டில் செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ள போலீஸ் குதிரை சக்திமான் அடுத்த 45 நாட்களில் நடக்க ஆரம்பிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சக்திமான் என்ற வெள்ளை குதிரை கடந்த 7 ஆண்டுகளாக மாநில காவல் துறையில் பணி யாற்றி வருகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் கடந்த மாதம் நடந்த போராட்டத்தின்போது, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தாக்கியதில் குதிரையின் இடது பின்னங்கால் முறிந்தது. இதையடுத்து உடைந்த கால் அகற்றப்பட்டு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சக்திமானுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்து வர்களில் ஒருவரான ராகேஷ் நாட்டியல் கூறும்போது, “செயற் கைக் கால் பொருத்தப்பட்ட சக்திமான் இப்போது தானாக எழுந்து நிற்கிறது. சில மணி நேரம் நிற்கிறது. சரியாக உணவுப் பொருட்களை சாப்பிடுகிறது. அத்துடன் புதன்கிழமை முதன் முறையாக 20 மீட்டர் தூரம் நடந்தது. இந்த நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற் பட்டால், அடுத்த 45 நாட்களில் சக்திமானால் நன்றாக நடக்க முடியும். எனினும், வலது பின்னங்கால் மூட்டிலும் அதற்கு பிரச்சினை உள்ளது. அதற்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT