புதுடெல்லி: சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு செயல்பட தொடங்கியுள்ள உ.பி. பள்ளிகளில் தற்போது கரோனா தொற்று பலருக்கு ஏற்பட்டுள்ளது.
டெல்லியை ஒட்டியுள்ள காஜியாபாத்தின் 2 தனியார் பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள நொய்டாவின் செக்டர் 40-ல் ஒரு தனியார் பள்ளியின் 3 வகுப்புகளிலும் 16 பேருக்குகரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் ஆசிரியர்கள்.
இதனால், அந்த 2 நகரங் களின் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இணையவகுப்பு கள் தொடர்கின்றன. இந்த பள்ளிகள் மீண்டும் 19-ல்திறக்கப்பட உள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திடீரெனகரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் அச்சத்தில்உள்ளனர். தற்போது உ.பி.யில்கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
உ.பி.யின் மற்ற பள்ளிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாகப் பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் தங்கள் உணவுப் பண்டங்களை சக மாணவர்களுடன் பரிமாறி கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குறித்து உடனடியாக நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காஜியாபாத் மற்றும் நொய்டாவின் பெரும்பாலான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் ஆர்டிபிசிஆர் மருத்துவப் பரிசோதனை சான்றிதழுடன் வரும்படி நிர்வாகங்கள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.