திட்டமிட்டு சமூகத்தை மதரீதியாகப் பிளவுறச் செய்தே பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியானது திட்டமிட்டு மதரீதியில் சமூகத்தை பிளவபடுத்தியது. முன்னேற்றவாதக் கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெறவில்லை. நல்ல நிர்வாகம் வழங்குவதிலும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.
குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல திட்டங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளின் தொடர்ச்சியாகும். என்று பேசினார் ஜெய்ராம் ரமேஷ்.