உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசியில், வரும் மே 1-ம் தேதி சூரிய மின்னாற்றலில் (சோலார்) இயங்கும் படகுகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து பாஜகவின் உத்தரப்பிரதேச (கிழக்கு) ஊடகப் பிரிவு நிர்வாகி சஞ்சய் பரத்வாஜ் கூறியதாவது:
வரும் 1-ம் தேதி கோயில் நகரமான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். அப்போது, டிஎல்டபிள்யூ மைதானத் தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 1,000 இ-ரிக் ஷாக்களை பயனாளி களுக்கு வழங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து கங்கை நதிக்கரையில் உள்ள அசி காட் பகுதிக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சூரிய மின்னாற்றலில் இயங்கும் 11 படகுகளை கொடியசைத்து நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் படகோட்டிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
இவ்வாறு சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி வாரணாசியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப் படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.