இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

வடக்கு காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் லால்போரா பகுதியில் உள்ள ஷேக்புரா என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.

இதில் தப்பியோடிய தீவிரவாதி களை தேடும் பணி முடுக்கிவிடப் பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மீண்டும் ஏற்பட்ட மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அங்கு பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT