கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழை வதற்கு தடை விதிக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இவ்வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி கள் வி.கோபால கவுடா, குரியன் ஜோசப் ஆகியோரடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “பாலின சமத்துவம் என்பது அரசியல் சாசன அமர்வு சொல்லும் செய்தி. மத விவகாரங்களைக் கையாள் வதற்கான உரிமையின் கீழ் பெண் களுக்குத் தடை விதிக்கப்படுகிறது என கோயில் நிர்வாகம் கூற முடியாது. பாரம்பரிய நடைமுறை எனக் கூறப்பட்டு வருவதை, அரசியல் சாசனத்தின் கீழ் அலசிப் பார்ப்போம்” என தெரிவித்தனர்.
பொதுநல மனு தாக்கல் செய்த தொண்டு நிறுவனம் சார்பில் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். அவர் வாதிடும்போது, ஐயப்பன் பிரம்மச்சாரி எனக் கூறப்படுகிறார் என்று வாதிடத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “திருவாங்கூர் தேவஸ்தானம் ஆன்மிக, பாரம்பரிய நடைமுறை களைச் சார்ந்து பேசுகிறது. நீங்கள் அரசியல் சாசனம் சார்ந்து பேசுகிறீர்கள். நாம் தெய்வத்தின் இயல்பு குறித்த விவாதத்தில் இறங்க வேண்டாம்” எனக் கூறி தடுத்து விட்டனர்.
அடுத்த கட்ட விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.