இந்தியா

திக்விஜய் சிங் மகள் புற்றுநோயால் மரணம்

பிடிஐ

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் மகள் கார்னிகா சிங் (37) இன்று புற்றுநோயால் உயிரிழந்தார்.

திக்விஜய் சிங்கின் 4 மகள்களில் கடைசி மகளான கார்னிகா சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுடெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 5 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

புற்றுநோய்க்காக இவருக்கு அமெரிக்காவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கார்னிகாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல், சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் உள்ள வத்வானுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

திக்விஜய் சிங்கின் முதல் மனைவியும், கார்னிகாவின் தாயுமான ஆஷாவும் புற்று நோயால் 2013-ம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT