இந்தியா

தண்ணீர் பஞ்சம் குறித்து டி.வி.யில் விவாதம்: பொதுமக்கள் திடீரென கல்வீசி தாக்கியதில் அமைச்சர், எதிர்க்கட்சி வேட்பாளர் காயம்

பிடிஐ

கேரளாவில் தொலைக்காட்சி விவாதத்தின் போது, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் அமைச்சரும், இடதுசாரி வேட்பாளர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

கேரளாவில் மே 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறு கிறது. காங்கிரஸ் தலைமை யிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாஜக கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கொல்லம் மாவட்டம், சவாரா கிராமத்தில் நேரடி விவாதத்துக்கு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விவாதத்தில் சவாரா தொகுதியில் போட்டியிடும் தொழி லாளர் துறை அமைச்சர் ஷிபு பாபு ஜான் (இவர் காங்கிரஸ் கூட்டணியில் ஆர்எஸ்பி சார்பில் போட்டியிடுகிறார்) மற்றும் எதிர்க் கட்சியான இடதுசாரி வேட்பாளர் விஜயன் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர். தொலைக்காட்சி விவாதத்தின் போது தண்ணீர் பஞ்சம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் ஜான் அளித்த பதில்களால் பொது மக்கள் எரிச்சல் அடைந்தனர். திடீரென அவர்கள் இருக்கை களை எடுத்து அவர்கள் மீது வீசினர். கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில் அமைச்சரின் வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனடி யாக அவரை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். சிகிச் சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.

அதேபோல், விஜயன் பிள்ளை யும் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆதர வாளர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார். இந்த வன்முறையால் பதற்றம் நிலவியது.

SCROLL FOR NEXT