இந்தியா

டெல்லி பல்கலை. 4 ஆண்டு பட்டப்படிப்பு ரத்து: மாணவர் சேர்க்கையைத் தொடர 12 பேர் குழு

செய்திப்பிரிவு

டெல்லி பல்கலைக்கழகத்தின் சர்ச்சைக் குரிய நான்காண்டு பட்டப்படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையைத் தொடர 12 கல்லூரி முதல்வர்கள் அடங்கிய குழு அமைக் கப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் நான் காண்டு படிப்பு குறித்து யுஜிசி-யுடன் நடந்த மோதலால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் 2.78 லட்சம் மாணவர்கள் செய்வதறியாமல் திகைத் துப்போயுள்ளனர்.

இப்பிரச்சினையை உடனே முடிவுக்கு கொண்டு வரும்படி பல் கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) கேட்டுக் கொண்டதை அடுத்து நான் காண்டு படிப்பை ரத்து செய்து டெல்லி பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.

ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் தினேஷ் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தற்போதைய நிலையை டெல்லி பல்கலைக்கழகம் உணர்கிறது. மாணவர் சேர்க்கையை தொடங்கி அவர்களது நலனை பாதுகாப்பது முக்கியம். யுஜிசி-யின் உத்தரவுப்படி நான்காண்டு படிப்பை ரத்து செய்ய டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2012 -13 கல்வி யாண்டில் கல்லூரிகளில் இருந்த நிலையைப் பின்பற்றி, இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கையைத் தொடங்கி துரிதமாக நடத்த, டெல்லி பல்கலைக்கழக கல்லூரி முதல்வர்கள் உரிய வழிமுறைகளை வகுப்பார்கள்.

இவ்வாறு தினேஷ் சிங் கூறியுள்ளார்.

இந்த முடிவை டெல்லி பல்கலைக் கழக பதிவாளர் அல்கா சர்மா யுஜிசி-க்கு அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, ‘டெல்லி பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தை நான் மதிக்கிறேன். ஆனால், நாட்டில் உள்ள மாணவர்களின் நலன் காக்கவே கல்வி மையங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாண வர்களின் நலன் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது,’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாண வர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தியதால், வெள்ளிக் கிழமை டெல்லி படேல் சவுக், சென்ட்ரல் செகரட் டேரியேட், உத்யோக் பவன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பாது காப்பு அதிகரிக்கப்பட்டது.

டெல்லி பல்கலைக்கழக கல்லூரி முதல்வர்களின் கூட்டம் வெள்ளிக் கிழமை நடந்தது. இக் கூட்டத்தில் 12 கல்லூரி முதல்வர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மாணவர் சேர்க்கை திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளது. வரும் 30-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

SCROLL FOR NEXT