இந்தியா

ஒலிபரப்புத் துறையில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க தனி இணையதளம் தொடங்கியது மத்திய அரசு

செய்திப்பிரிவு

ஒலிபரப்புத் துறை சார்ந்த தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் நோக்கில் அதற்கென்றுதனி இணையதளத்தை நேற்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ப்ராட்கேஸ்ட் சேவா போர்ட்டல்’ என்ற அந்த தளம் மூலமாக, ஒலிபரப்புத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் தொழிலுக்கான அனுமதி, உரிமம், பதிவு,புதிப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகளை எளிமையாக மேற்கொள்ள முடியும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘‘தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை குறுகிய காலத்தில் முடிக்க இது உதவும். தவிர, விண்ணப்பங்களின் நிலவரத்தை அவ்வப்போதுபரிசோதித்துக் கொள்ளலாம். அந்த வகையில், இந்தத் தளம்ஒரு முக்கியமான நகர்வு’’ என்றார்.

SCROLL FOR NEXT