பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ 
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சியினர் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டஎரிபொருட்களின் விலை உயர்வுநாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. விலை உயர்வு குறித்துமக்களவையில் விவாதிக்கும்படிபல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை அவைத் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலங்களவையிலும் இதே பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று காலை கூடியதும் எரிபொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், முதலில் பகல் 12 மணி வரையிலும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

6 உறுப்பினர்கள் பதவியேற்பு

பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் அவைநாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, மாநிலங்களவைக்கு அசாமில் இருந்து பாஜகசார்பில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட பபித்ரா மர்கேரிட்டா மற்றும் கேரளாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெபி மதேர் ஹிஸாம் உட்பட6 உறுப்பிர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

- பிடிஐ

SCROLL FOR NEXT