திருமண வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 மர்ம நபர்கள் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. எனவே, இவர்கள்தான் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதி காரி முகமது தன்சில் அகமதை கொலை செய்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தன்சில் அகமது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், உத்தரப் பிரதேசம், பிஜ்னோர் மாவட்டம் சஹஸ்பூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற உறவினரின் திருமணத் தில் பங்கேற்றார். பின்னர் நள்ளிர வில் வீட்டுக்கு காரில் சென்று கொண் டிருந்தபோது, 2 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து உ.பி.போலீஸாரும் என்ஐஏ அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
இந்நிலையில், தன்சில் பங்கேற்ற திருமண வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகப்படும் வகையில் 2 மர்ம நபர்கள் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. இவர் கள்தான் தன்சில் அகமதை கொலை செய்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து இந்தக் கொலை வழக்கு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள உ.பி. காவல் துறை மூத்த அதிகாரி விஜய் மீனா கூறும்போது, “வீடியோ காட்சியில் உள்ள 2 மர்ம நபர்கள் யார் என்று தெரியாது என திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர். எனவே, இவர் கள்தான் தன்சிலை கொலை செய் திருக்கலாம் என்று கருதுகிறோம்.
எனினும், திருமண வீட்டாரின் உறவினர்கள், உணவு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள், மின்சாதன ஏற்பாட் டாளர்கள் உட்பட பல்வேறு தரப் பினரிடம் இந்த நபர்களைப் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இந்த நபர்கள் யார் என்று தெரிய வில்லை என்று அவர்கள் கூறிவிட் டால், அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு தேடப்படும் நபர் களாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
தன்சில் கொல்லப்பட்ட இடத்தி லிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பொருத் தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் செல்வது தெரியவந் துள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, தன்சிலின் மகள் ஜிம்னிஷ் (15) மற்றும் மகன் ஷபாஸ் (12) ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். ஜிம்னிஷ் கூறும்போது, “துப்பாக்கி சத்தம் கேட்டதும், இருக்கைக்கு கீழ் ஒளிந்து கொள்ளுமாறு எனது தந்தை கேட்டுக்கொண்டார். அதன்பிறகு பலமுறை துப்பாக்கி சத்தம் கேட்டது” என்றார்.
ரூ.20 லட்சம் இழப்பீடு
மர்ம நபர்களால் கொல்லப்பட்ட தன்சில் அகமது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.