பிஹார் மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் நேற்று நேரிட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
அவுரங்காபாத் அருகே ஹரி நகர் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்த ஜக்தா ராம் வீட்டில் ஒரு விழாவுக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். பக்கத்து வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ, ஜக்தா ராம் வீட்டுக்கும் பரவியுள்ளது.
இதில் வீட்டில் இருந்த 6 குழந்தைகள், 2 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.