நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக 2-வது பாதி நடைபெறாது என சில தகவல்கள் வெளியாகின. இது பற்றி அறியாத சிலர் எங்களை விமர்சிக்கவும் தொடங்கிவிட்டனர். உத்தராகண்ட் அரசியல் சூழல் காரணமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. உரிய மசோதா நிறைவேற்றப்பட வேண்டியிருந்ததால் ஒத்திவைக் கப்பட்டு, வரும் 25-ம் தேதி தொடங்கி, மே 13-ம் தேதி நிறை வடைகிறது.
ஜிஎஸ்டி தற்போது மிகவும் அவசியம். ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டால் 1.5 முதல் 2 சதவீதம் ஜிடிபி அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நான் நிதியமைச்சருடன் பேசியிருக் கிறேன். எதிர்கட்சிகள் சுட்டிக் காட்டியவற்றில் பெரும்பாலான வற்றுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. ஏதேனும் எஞ்சியிருந்தால், அவையும் தீர்க்கப்படும்.
வரியை அரசியல் சட்டவரம் புக்கு உட்பட்டதாக மாற்றும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என ராகுல் கூறியதாக கேள்விப்பட் டேன். இதற்கு சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது. காங்கிரஸுக்கும் அது தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.