கேரள சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி பாஜக தரப்பில் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தரப்பில் அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மே தொடக் கத்தில் கேரளாவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
வரும் மே 16-ம் தேதி கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறுகிறது. அந்த மாநிலத்தில் காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜன நாயக முன்னணி, பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும் முனை போட்டி நிலவுகிறது.
ஆளும் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்ட வரும் மே 9-ம் தேதி திருவனந்தபுரம், திருச்சூரில் நடை பெறும் பொதுக்கூட்டங்களில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார். மே 12 முதல் ராகுல் காந்தி கேரளாவில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
முதல்வர் உம்மன் சாண்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோனி, ரமேஷ் சென்னி தாலா உள்ளிட்டோர் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மோடி பிரச்சாரம்
பிரதமர் மோடியின் பயணத் திட்டம் குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. எனினும் மே மாத தொடக்கத்தில் அவர் கேரளா வில் பிரச்சாரம் செய்வார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள் ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கேரளாவில் தனது பிரச் சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பொலிட்பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் உள் ளிட்டோர் கேரளாவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.