வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளை யும் ஒரே அணியாகத் திரட்டும் முயற்சியில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் புதிய தலைவராக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்க அவர் முயன்று வருகிறார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது, “சில கட்சிகளை இணைப் பது, சில கட்சிகளுடன் கூட்டணி, சில கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு என பல வகைகளிலும் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஓரணியாக திரட்டுவதற்கு அதிகபட்ச வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைந் தால், 2019 தேர்தலில் பாஜக வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அதே சமயம் பிரதமர் பதவிக்கு யாரும் முன்னுரிமை கோர மாட்டார் கள். யார் தகுதியானவர்கள் என்பதை மக்கள் முடிவு செய் வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “ஜனதா பரிவார் தலைவராக முலாயம் சிங்கை நானும், லாலுவும் ஏற்றுக் கொண்டோம். ஆனால் ஓசை எழுப்ப இரு கைகள் வேண்டும்” என்றார்.
பிஹார் தேர்தலின்போது, கடைசி நேரத்தில் முலாயம் சிங் யாதவ் தனியே பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.