காஷ்மீர் மாநிலம் பத்கம் மாவட்டத்தில் நோட்டமிட்ட தீவிரவாதிகள், நேற்றிரவு அங்கிருந்த காவல் நிலையம் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த மூன்று துப்பாக்கிகள் கைப்பற்ற சென்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பத்கம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தை சில தீவிரவாத குழுக்கள் நோட்டமிட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு, காவல் நிலையத்தினுள் புகுந்து 3 தீவிரவாதிகள் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர்.
பின்பு அங்கிருந்த 3 கைதுத் துப்பாக்கிகளை கைப்பற்றி சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாவட்ட கூடுதல் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.