மும்பையைச் சேர்ந்த டிவி நடிகை பிரதியுஷா(24) கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். காதலர் ராகுல் ராஜ் சிங்குடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, காவல் துறையினர் ராகுல் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராகுல், கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிறகு, காவல் துறையினர் அவரை விசாரிக்கவுள்ளனர்.