ஜிகா வைரஸ் வடிவமைப்பைக் கண்டறிந்த அமெரிக்க குழுவில் இடம்பெற்ற இந்திய ஆய்வு மாணவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“ஜிகா வைரஸின் வடிவ மைப்பை வெற்றிகரமாகக் கண் டறிந்த அமெரிக்க குழுவில் இடம்பெற்ற மீரட்டைச் சேர்ந்த செல்வி. தேவிகா சிரோஹிக்கு பாராட்டுகள். அவர் தனது குடும்பத்துக்கு மட்டுமின்றி, தேசத் துக்கும் பெருமை சேர்த்துள்ளார். தேவிகா சிரோஹியின் சாதனை, பெண் கல்வியின் முக்கியத் துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்தில் நமது கவனம் இருக்க வேண்டும்” என ராஜ்நாத் சிங் ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
ஜிகா வைரஸின் வடிவமைப்பை அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 ஆய்வாளர்கள் குழு கண்டறிந்தது. இந்தக் குழுவில் மிக இளம் வயதுடையவர் இந்தி யாவைச் சேர்ந்த ஆய்வு மாணவி தேவிகா சிரோஹி (29) ஆவார்.