இந்தியா

‘குற்றவாளிகள் போட்டியிடுவதை ஏன் தடுக்க முடியவில்லை’: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

செய்திப்பிரிவு

பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்பும் குற்றப் பின்னணி உள்ள வர்கள் தேர்தலில் போட்டி யிடுவதை ஏன் தடுக்க முடிய வில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 25 பேர் பங்கேற்ற மாநாடு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி வளாகத்தில் 3 நாட்கள் நடந்தது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பங்கேற்றார். அவரிடம் நீதிபதிகள், ‘தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் நுழைவதை தடுக்க பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்ட பின்பும் ஏன் தடுக்க முடியவில்லை?’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு குரேஷி, ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி பற்றி விசாரிக்க தேர்தல் ஆணையத்திடம் பணி யாளர்கள் இல்லை. புகார் வந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது’ என்றார்.

SCROLL FOR NEXT