இந்தியா

கோதண்டராம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

புராதன கோயில்களில் ஒன் றான ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பராமரிக் கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இதன்படி நாளை தொடங்க உள்ள இந்த விழாவுக்காக கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ள தால், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை யும் செய்துள்ளதாக துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் செய்தியாளர் களிடம் நேற்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT