இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கில் இமாச்சல் முதல்வருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு

ஐஏஎன்எஸ்

வருமானத்துக்கு அதிகமாக 6.03 கோடி சொத்துகள் குவித்ததாக இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக டெல்லி மற்றும் சிம்லாவில் உள்ள வீரபத்ர சிங் வீடுகளில் கடந்த ஆண்டு செப்டம் பரில் சிபிஐ சோதனை நடத்தியது.

இதையடுத்து இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகிய வீரபத்ர சிங், இவ்வழக்கில் விசாரணை, கைது நடவடிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை பெற்றார்.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றத் தால் மாற்றப்பட்டது. இதையடுத்து இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தடையை நீக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை சிபிஐ அணுகியது.

இவ்வழக்கு டெல்லி உயர் நீதி மன்றத்தில் நீதிபதி பிரதீபா ராணி முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது வீரபத்ர சிங் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தொடர்ந்து தள்ளி வைக்க கோருவதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

“வழக்கில் இருந்து பாதுகாப்பு பெற்ற பிறகு உங்களுக்கு வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை” என்று கூறிய நீதிபதி, இனிமேலும் வழக்கை தள்ளி வைக்க அனுமதிக்க மாட்டேன்” என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை 1 நாள் தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT