அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்: கோப்புப் படம் 
இந்தியா

பஞ்சாபில் ஆம் ஆத்மி - ஆட்சி காங்கிரஸ் இடையே கடும் போட்டி

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மியும் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி இருந்தது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்தன. அதன்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சிரோண்மணி அகாலிதளம் 3-வது இடத்திலும், பாஜக கூட்டணி 4-வது இடத்திலும் உள்ளன.

SCROLL FOR NEXT