கேரள முதல்வர் உம்மன் சாண்டியை டி.ஒய்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இருவர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த இருவருக்கு முதல்வர் சாண்டியே விருது அளித்துள்ளார்.
கண்ணூரில் நேற்று ஹரிதா கேரளம் என்ற பசுமைத் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்த கேரள முதல்வர் தன்னைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பினாய் குரியன், பிஜு கண்டகை ஆகிய இருவருக்கும் சிறந்த சுற்றுசூழல் நடவடிக்கைகான விருதை வழங்கினார்.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி உம்மன் சாண்டி கேரளா வந்திருந்த போது தாக்கப்பட்டார். இந்த வழக்கில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த பினாய் குரியன், பிஜு கண்டகை ஆகியோர் 3வது மற்றும் 4வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர்.
நேற்றைய விழாவில் அந்தத் தாக்குதலில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கபப்ட்ட பையனூர் எம்.எல்.ஏ, மற்றும் சிபிஎம் கட்சித் தலைவர் சி.கிருஷ்ணனும் மேடையில் அமர்ந்திருந்தது இன்னொரு வேடிக்கை முரண்.
இந்த வழக்கில் இடது ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 114 பேர் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேற்று விருது வழங்கப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.