இந்தியா

சாராய அதிபர்களுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி: கேரள காங்கிரஸ் தலைவர் சுதீரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

‘சாராய அதிபர்களின் உதவி யுடன், ஆட்சியைப் பிடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிக்கிறது’ என்று கேரள காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் குற்றம்சாட்டினார்.

கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில், மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னியில், தேர்தல் கூட்டத்தை மாநில காங்கிரஸ் தலைவர் விஎம்.சுதீரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கேரளாவில் சாராய அதிபர்களை திருப்திப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது. சாராய அதிபர்களின் உதவியுடன் ஆட்சியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் திட்டமிட்டுள்ளது.

மேலும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சொல்வது போல் செயல்படுவதை விட, சாராய அதிபர்கள் சொல்வது போல் மார்க்சிஸ்ட் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் டும், பாஜக.வும் கொலை அரசிய லில் ஈடுபடுகின்றன. கேரள மக்கள் அவர்களது செயல்பாடு களை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

இவ்வாறு சுதீரன் பேசினார்.

SCROLL FOR NEXT