புகையிலை பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் இணையதளத்தில் மேலும் கூறியிருப்பது: புகையிலை பொருள்களை பயன்படுத்துவதை கைவிடுவதுதான் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கு வதற்கான அடிக்கல்.
புகையிலையால் மனித சமுதாயத்துக்கு ஏற்படும் கேடுகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்க பாடுபடு வோம் என்று இந்நாளில் நாம் உறுதியேற்க வேண்டும். உட்கொள்ளுவோரை மட்டுமின்றி அருகில் இருப்பவர் களையும் புகையிலை புகைப் பொருள்கள் பாதிக்கிறது.
இந்தியாவில் புகையிலையால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மட்டும் 2011-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 4 ஆயிரத்து 500 செலவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக் கிறது என்று மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.