புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரானும் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது உக்ரனைனுக்கு எதிரான ரஷ்ய போர் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில், போர் நிறுத்தம் எட்டப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் மக்ரானும் ஒருமித்த கருத்தை எட்டினர்.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையற்ற மனிதாபிமான உதவிகளை உறுதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். இந்த விஷத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்” என கூறப்பட்டுள்ளது.