மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
பல மொழிகள் உள்ள நாடாக இருப்பதற்கு நாம் பெருமைபட வேண்டும். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் இந்தியாவில் இருக்கிறது. அதை நினைத்து நாட்டு மக்கள் பெருமை கொள்ள வேண்டும்.
தாய், தாய்மொழி இரண்டும்வாழ்க்கையை பலப்படுத்தும். தாயை எப்படி கைவிட முடியாதோ, அதேபோல் தாய்மொழியையும் கைவிட முடியாது. நம் நாட்டில் 121 வகையான மொழிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு உலகில் அதிகமாக பேசக் கூடிய மொழிகள் பட்டியலில் இந்தி 3-வது இடம் பிடித்தது. இதற்காகவும் நாம் பெருமைப்பட வேண்டும். மொழி என்பது சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவது. நமது தாய்மொழியை பெருமையுடன் பேச வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கட்ச் முதல் கொஹிமா வரை நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான வட்டார வழக்கு மொழிகள் உள்ளன. அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டவை. பல மொழிகள்... ஆனால், ஒரே உணர்வு.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். -பிடிஐ